காதல்2 – தமிழ் இலக்கியம்

தலைவி ஆழ்ந்த சிந்தனையுடன் காணப்படுகிறாள்.

தோழி தலைவிடம் சென்று அந்த மயக்கத்துக்கு என்ன காரணம் என்று கேட்கிறாள்.

அதற்கு தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்

சிறிது காலமாக,

ஒரு ஆண்மகன் என் குடில் அருகே  உள்ள மரத்தின் அருகில் நின்று,

என்னை உற்று நோக்கியபடி இருப்பான்.

வாயை திறந்து எந்த ஒரு சொல் கூறமாட்டேன்.

அவன் வேடன் போன்ற  தோற்றத்துடன் ஏதோ

மானை தவிர விட்டவன் போல,

அதன் கால் தடயங்களை தேடி வந்தவன் போல் தெரிகிறது,

அவன் வருவதும், போவதுமாக  இருக்கிறான்.

அவன் எண்ணங்களை வாய் விட்டு கூறாமல் இறந்து விடுவான் போல.

அவனுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை,  ஆனால், 

அவன் நிலைமை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்துகிறது.

அதே சமயம் நான் ஒரு பெண்ணாக இருந்த்தால்,

நான் அவனிடம் போய் முதலில் பேசுவது சரியில்லை.

அது நம் போன்ற பெண்களுக்கு அழகு இல்லை.

ஆதலால் நான் ஒரு முடிவு எடுத்தேன்.

ஒரு நாள் கிளிகளை விரட்ட வயல்களுக்கு சென்றேன்.

அங்கு என் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தேன். அங்கே

அவன் ஒரு மரத்து அடியில் நின்று என்னை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்.

நான் அவனை அழைத்தேன், அவன் என் அருகில் வந்தான்.

நான், “ஐயா, ஊஞ்சலை ஊக்கி விடுங்க! என்றேன்”

அவன் “ஆகட்டும்” என்றான்.

அவன் என் முன் நின்று,

எண்ணை அவன் கண்களால் விழுங்கிய படி இருந்தான் .

அப்பொழுது நான் ஊஞ்சலில் இருந்து கைநழுவது போல

எதிரே நின்ற அவன் மார்பின் மீது விழுந்தேன்.

அவன் என்னை இறுக அணைத்து கொண்டான்.

நான் மூர்ச்சை அடைந்தது போல்  

அவன் மீது கொடி போல் படர்ந்து இருந்தேன்.

நான் தெளிவு அடைந்தேன் என்று அறிந்தால்,

அவன், “இறங்கி போ” என கூறுபவன் போல், மிக

நேர்த்தியவனாக காணப்பட்டான்…

இலக்கியம்: கலித்தொகை