தலைவன் தன் ஐயத்தை ஒரு தேனீயுடன் உரையாடுதல்
தலைவன் தலைவியை கண்டவுடன், அவளை பின்புறமாக சென்று அணைக்கிறான். அப்பொழுது, அவள் கூந்தலில் இருந்து வரும் நறுமணம் அவனை மெய்சிலிர்க்க செய்கிறது.
தலைவனுக்கு ஒரு ஐயம் வருகிறது. தன் தலைவிக்கு இயற்கையில் கூந்தலுக்கு மணம் உள்ளதா? யாரிடம் கேட்பது?
அப்பொழுது அவன் அருகே ஒரு வண்டு தென்படுகிறது. அவன் அதனிடம் தனது ஐயத்தை போக்கிக் கொள்ள முயல்கிறான் என்பது போல இந்த பாடல் அமைந்துள்ளது
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
சிறந்த தேன்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கையுடைய, அழகிய சிறகுகளை கொண்ட உயர் ஜாதியை சேர்ந்த தும்பியே.
நான் கேட்கும் கேள்விகளுக்கு இனிமையான பதில் கூறாமல், நீ கண்டதை கண்டபடி கூறவேண்டும்.
எனக்கு ஒரு காதலி இருக்கிறாள், அவள் எனக்கு பலகாலமாக பழக்கப்பட்டவள். மிக நெருக்கமான உறவை கொண்டவள்.
அவள் மயிலை போன்ற மென்மையான சாயலை உடையவள், அதுமட்டுமல்ல
அழகான வரிசையான பற்கள் கொண்டவள். என் ஐயம் என்னவென்றால்
அவளுடைய கூந்தலில் இருந்து வரும் நறுமணம் நீ அறிந்த பூக்களின் இம்மணம் உண்டோ…
இப்போது பாடல்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
(தேன்களை தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கை உடைய அழகான சிறகுகளை கொண்ட தும்பியே)
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
(இனிமையான பதிலை கூறாமல், உண்மை மட்டும் கூறு)
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
(மிகவும் பழக்கமானவள், நெருக்கமான நட்பினை உடையவள், மயிலை போன்ற மென்மையானவள்)
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
(நெருக்கமான பற்களை கொண்டவள், அவள் கூந்தலில்)
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
(நறுமணம் நிகர், நீ அறிந்த பூக்களின் உள்ளவோ!)
காதல் காதலனை அலைக்கழிக்கும், அழவைக்கும், அழகாக்கும்… ஆனால் இங்கே தலைவனை அறிவுடைமையை தூண்டுவது போல் அமைகிறது .
மேலும் தலைவன் தலைவி மீது கொண்ட காதல் அவனை தன்னிலை மறந்து கூந்தல் ஆராய்ச்சி ஈடுபடுகிறான். காதல் போதையில் அவன் வண்டு இடம் பேசுவது போல் காட்சி காணப்படுகிறது.
அவன் வைத்த கேள்வியை இன்று வரை பதில் தேடி அலைகிறது வண்டு…
பாடல் பாடியவர்: இறையனார்
இலக்கியம்: குறுந்தொகை