
தலைவன், தலைவியின் தோழியுடன் உரையாடல்
தலைவன் காதல் மிகுதியால் காதலியை காண,
சிவப்பு நிறம் பூக்கள் களை கொணர்ந்து வருகிறான்,
அதை தோழி இடம் கொடுத்து, தன் தலைவிடம் கொடுக்குமாறு கூறுகிரான்,
அதை தோழி வாங்க மறுக்கிறாள்.
தோழி இவ்வாறு கூறுகிறாள்
“செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.”
போர்க்களம் குருதியால் சிவந்து கிடப்பது போல எங்கள் முருகன் அரக்கர்களை கொன்று குவித்ததால் அவன் வேலும் அவனுக்கு வாகனமாக சென்ற யானையின் தந்தம் களும் பகைவர் குருதி கரை படிந்து காணப்படும்.
இம் மலை நாடுகளை ஆட்சி செய்யும் எங்கள் முருகன் பல போர்களை வென்றதால், இந்த சிவப்பு பூக்களை சூட்டி வணங்குவோம்.ஆகையால் என் குல பெண்கள் செங்காந்த பூக்கள் சூடுவது இல்லை. ஆதலால், இப் பூக்கள் எங்கள் மலை முழுவதும் கொத்து கொத்தாக மலிந்து காணப்படும்.
மேலும், இதை மீறி இப்பூக்களை சூடினால் எம் மக்கள் என் தலைவிக்கு எந்த ஆண்மகன் கொடுத்ததோ என்று ஆசைப்படுவார்கள் என்று கூறுவது போல அமைகிறது இந்த பாடல்…
இப்போது பாடலை காண்போம்
“செங்களம் கொன்று அவுணர்த் தேய்த்த”
(எங்கள் முருகன் அரக்கர்களை கொன்று குவித்ததால், சிவந்த நிறமாக காட்சி அளிக்கும் நிலம்)
“செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை”
(சிவந்த இரத்தக்கறை படிந்த வேல், சிவந்த இரத்தக்கறை படிந்த யானையின் தந்தம்)
“கழல் தொடி, சேஎய் குன்றம் ”
(அவன் காலில் அணிந்திருக்கும் நகை, முருகன் ஆட்சி செய்யும் மலைகள்)
“குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.”
(சிவந்த பூக்கள் பறிக்கப்படாமல் கொத்துக் கொத்தாக காணப்படும்)
இப் பாடல் காதலனுக்கு காதலியின் தோழி அறிவுரை கூறுவது போல் அமைய பெற்றுள்ளது. காதலன் காதலிக்கு வாங்கும் பொருள், அவளுக்கு அப்பொருள் பொருந்துவது போல் அமைய வேண்டும் என்பதே இதன் கருத்து.
பாடல் பாடியவர்: திப்புத் தோளார்
இலக்கியம்: குறுந்தொகை